in

அழகர் கோவிலில் தைலக்காப்பு உற்சவம்..

அழகர் கோவிலில் தைலக்காப்பு உற்சவம்..

மதுரை – மேலூர் அருகே அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் தைலக்காப்பு உற்சவம் நடைபெற்று வருகின்றது.

ஆலயத்தில் இருந்து அலங்கார பல்லக்கில எழுந்தருளி புறப்பட்டு, அழகர், மலைபாதை வழியாக புறப்பாடாகி சென்று மலை மீதுள்ள நூபுரகங்கைக்கு செல்கிறார். அங்குள்ள மண்டபத்தில் 11.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் கள்ளழகர் பெருமாளுக்கு திருத்தைலம் சாத்தப்படும். அதன் பின்னர் 12 மணிக்கு மேல் உலகப் பிரசித்தி பெற்ற நூபுர கங்கை தீர்த்தத்தில் சுவாமி நீராடும் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறும்.

பிறகு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் தீபாராதனைகள் பட்டர்களின் வேத மந்திரங்களுடன், மங்கள இசையுடன் நடைபெறும். பின்னர் மாலையில் சுவாமி அங்கு இருந்து புறப்பாடாகி வந்த வழியாகவே சென்று கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேருகின்றார்

What do you think?

சென்னை மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை கூடழலகர் பெருமாள் கோவிலில் ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்