நாமக்கல் காளிப்பட்டி கந்தசாமி ஆலயத்தில் தைப்பூச கொடியேற்ற விழாவுடன் துவக்கம்
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை அடுத்த காளிப்பட்டி கந்தசாமி ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் நேற்று மாலை கொடியேற்ற நிகழ்வு மிக விமரிசையாக நடைபெற்றது. அப்போது மூலவருக்கு சிறப்ப பூஜை பின் கையில் கொடியினை ஏந்தியவாறுகோவிலை சுற்றி வந்து திருக்கோவில் முன் கொடிக்கம்பத்தில் அரோகரா அரோகரா கோசத்துடன் ஏற்றப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்போது மூலவர் முருகப்பெருமானுக்கு மகா தீபம் காண்பிக்கப்பட்டது.
வரும் செவ்வாய்க்கிழமை தைப்பூசத்தன்று தைப்பூச திருத்தேர் மிக சிறப்பாக நடைபெற உள்ளது