in

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது

 

பழனி தைப்பூச எட்டாம் திருவிழாவான இன்று கிரிவலப் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முருக பக்தர்களுடன் சேர்ந்து ஆட்டம் ஆடி வெளிநாட்டவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தைப்பூச திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் விழாவாக நடைபெற்று வருகிறது.

தைப்பூசத் திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. தைப்பூசத் திருவிழாவில் ஒன்றை லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். இன்று தைப்பூச விழா எட்டாவது நாள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தைப்பூசத் திருவிழா தேரோட்டம் முடிந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் இருந்து பழனிக்கு வந்துள்ள முருக பக்தர்கள் மலையடிவாரத்தில் காவடிகளை சுமந்து கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இன்றைய தினம் மலைக் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கட்டணமில்லாமல் அனைவரும் தரிசனம் செய்து சென்று வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. மலை மீது செல்லும் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து விரைவாக சாமி தரிசனம் செய்ய போலீசார் மற்றும் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளனர்.

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கும்பமேளாவில் பங்கேற்க வந்தவர்கள் பழனி தைப்பூச திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் முருக பக்தர்களுடன் சேர்ந்து ஆட்டம் ஆடி வெளிநாட்டவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

What do you think?

மயிலம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா

மகளீர்க்கு கட்டனமில்லா பயண சீட்டு வழக்கக்கோரி த.வெ.க.வினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு