ஜீ மீடியா…வுக்கு எதிராக தல தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு
புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, ஜீ மீடியா, ஐபிஎஸ் அதிகாரி ஜி சம்பத் குமார் மற்றும் பத்திரிகையாளர் மீது ஐபிஎல் மேட்ச் பிக்சிங் (IPL Match-Fixing Scandal.) ஊழலில் தன்னை இணைத்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி 2014 ஆம் ஆண்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இழப்பீடு தொகையாக 100 கோடியை தோனி கோரினார். ஜீ மீடியாவுக்கு எதிரான வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
2023 செப்டம்பரில், தோனியின் சட்டக் குழு முன்வைத்த விசாரணைகளை ரத்து செய்யக் கோரி ஜீ மீடியா கார்ப்பரேஷன் தாக்கல் செய்த மேல்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அப்போது, இந்த விசாரணைகளுக்கு பத்து நாட்களுக்குள் பதிலளிக்க ஜீ மீடியாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று வழக்கு மீண்டும் தொடங்கும் நிலையில், இது குறிப்பிடத்தக்க சட்ட தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அனைவரின் பார்வையும் முடிவை நோக்கியே உள்ளது..
தோனி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜி சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனையை 2023 டிசம்பரில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்தது. எனினும், பின்னர் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்புக்காக பரபரபுடன் காத்திருக்கும் Dhoni மற்றும் ரசிகர்கள்..