தளபதி 69 நூறு சதவீதம் கமர்ஷியல் …. வினோத் அறிவிப்பு
நடிகர் விஜய் GOAT படத்தை முடித்த கையோடு, எச் வினோத் இயக்கத்தில் தனது கடைசி படத்தில் நடிக்கிறார்.
விஜய்யின் அரசியல் பிரவேசத்தை கருத்தில் கொண்டு இது அரசியல் படமாக இருக்குமா என்று வினோத்திடம் கேட்ட போது, இது 200 சதவீதம் தளபதி படமாக இருக்கும்.
இந்தப் படத்தை நான் கமிட் செய்தபோது, எல்லா வயதினரையும் மட்டும் அல்ல, அரசியல் ஸ்பெக்ட்ரம் முழுவதையும் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று திட்டம்யிட்டு உள்ளேன்.
தளபதி 69 சரியான கமர்ஷியல் படமாக இருக்கும் என்று கூறிய வினோத், “இந்த படம் எந்த அரசியல் தலைவரையும் அல்லது அரசியல் கட்சியையும் குறிவைத்து எடுக்கப்படாது.
இது 100 சதவீதம் கமர்ஷியல் படமாக இருக்கும்” என்று வினோத் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான செட்டை திருப்போரூர் லும் பனையூரில் உள்ள கடற்கரை சாலையிலும் செட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றது.
டிசம்பர் மாதத்திற்குள் முழு படப் பிடிப்பையும் முடித்து விட வேண்டும் என்று திட்டமிட்டு உள்ள நிலையில் அடுத்த வருடம் 2025 ஆம் ஆண்டு சினிமா துறைக்கு குட்பாய் சொல்லிவிட்டு அரசியல் பணிகளில் ஈடுபட இருக்கிறார்.