தளபதி 69 ஷூட்டிங் viral videos
தனது புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (டிவிகே) முதல் பொது மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த நடிகர் விஜய் தனது கடைசி படமான தளபதி 69 படத்தின் ஷூட்டிங்..கில் முழுவீச்சில் இறங்கியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு திருப்போரூர் அருகே ஆக்ஷன் காட்சிகளுக்காக செட்கள் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு வெளியே, ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் அதிக அளவில் நடிகரைப் பார்க்க திரண்டனர்.
விஜய் தனது ரசிகர்களுடன் உரையாடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. H. வினோத் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாகவும், பாபி தியோல், மமிதா பைஜு, மம்தா மோகன்தாஸ், கௌதம் மேணன் பிரகாஷ்ராஜ் , ப்ரியாமணி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் அதிரடி சண்டை காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது படத்தின் சூட்டிங் பிப்ரவரி மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.