Thalapathy 69 Title update….. டிசம்பர் வெளியீடு
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான தளபதி விஜய், தனது மாஸ் நடிப்பால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
விஜய்யின் சமீபத்திய படங்களின் வெற்றிக்குப் பிறகு, அவரது அடுத்த கடைசி படமான விஜய்யின் தளபதி 69..னை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
தற்காலிகமாக தளபதி 69 என்று பெயரிடப்பட்ட இப்படத்தில் விஜய்…இக்கு ஜோடியாக பூஜா ஹெட்கே, பாபிதியோள், Mamitha Baiju நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
இப்படம் அக்டோபர் 2025 இல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உட்பட பல மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தளபதி 69 படத்தின் முதல் போஸ்டர் வெளியானதும், இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி சில மணி நேரங்களிலேயே, இந்த போஸ்டர் 60,000க்கும் அதிகமான லைக்குகளையும் 1.3 மில்லியன் பார்வைகளையும் பெற்றது.
விஜய்யின் கடைசி படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்று ரசிகர்களிடம் ஆர்வம் தொற்றிக் கொண்டிருக்கும் நிலையில் டைடல் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
டிசம்பர் 31ஆம் தேதி இரவு டைட்டில் வெளியிடப்படும் என்று படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.