in

Thalapathy 69… மாஸ் கூட்டணி

Thalapathy 69… மாஸ் கூட்டணி

விஜய் தற்போது தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்த பிறகு திரை வாழ்கைக்கு விடை சொல்லிவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடுவதால் தனது கடைசி படம் ரசிகர் மனதில் நின்று பேச வேண்டும் என்று எச்.வினோத்துக்கு கட்டளையிட்டு இருக்கிறார்.

மேலும் இப்படத்தில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் விஜய்…இக்கு ஜோடியாக மமீதா பைஜூ நடிக்கிறார், முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இவர்கள் இருவரின் காம்பினேஷன் ஜில்லா செம…யாக வொர்க் அவுட் ஆனதால் இவரது கடைசி படத்திலும் மோகன்லால் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில்.

மேலும் தளபதி விஜய் மற்றும் பாபி தியோல் இடையே ஒரு பெரிய மோதலை இப்படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் சென்னை மற்றும் திருப்போரூர் பகுதிகளில் ஷூட்டிங் நடக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

What do you think?

படங்களை ஹிந்தியில் டப் செய்ய கூடாது

ஜெயம் ரவி….க்கு எதிராக வலுக்கும் கண்டனம்…ஆர்த்திக்கு பெருகும் ஆதரவு