தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டு தேதியை அறிவித்த தளபதி விஜய்
தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டு தேதியை அறிவித்த தளபதி விஜய். தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி கிராமத்தில் நடைபெறுவதாக ஏற்கனவே நடிகர் விஜய் அறிவித்திருந்தால் அதற்கான தேதியும் தற்பொழுது முடிவாகிவிட்டது.
வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி மாலை நாலு மணிக்கு நடைபெற உள்ளது. அது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிற்றுள்ளார். தளபதி விஜய் நம்மை வழிநடத்த போகும் கொள்கைகளையும் அடையப் போகும் இலக்குகளையும் தெரிவிக்கும் விழாவாக இந்த மாநாடு பெருவிழாவாக கொண்டாடப்பட உள்ளது.
அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது என்றும் இந்த மாநாட்டின் மூலம் வலிமையான அரசியல் பாதையை அமைப்போம் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த தமிழ் மண் நாட்டை சேர்ந்த மகனாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன் விரைவில் சந்திப்போம் வாகை சூடுவோம் என்று பொதுமக்களுக்கு அறிவுப்பையும் வாழ்த்துக்களையும் கூறி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.