தனி ஒருவன் ..2 ட்ராப்…பா
2015 ஆம் ஆண்டு தமிழின் பிளாக்பஸ்டர் மோவியான தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் கோலிவுட் ரசிகர்களை ஏமாற்றும் வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தனி ஒருவன் ..2 …வில் மோகன் ராஜா இயக்கத்தில் மோகன் ரவி மற்றும் நயன்தாரா இணைவதாக அறிவிக்க பட்டது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் OTT சந்தையின் சரிவுதான் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று. OTT ஒப்பந்தத்தில் கையெழுத்திட குழு முயற்சித்தது, ஆனால் அது நிறைவேறவில்லை.
படத்தின் பட்ஜெட் மிக அதிகமாக இருந்ததாகவும், ரவி மோகனின் சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யாததால் OTT ஓப்பந்தம் போட மறுத்துவிட்டது.. இந்த காரணிகலால் பட பிடபிடிப்பு நிறுத்தி வைக்கபட்டுள்ளது மேலும் ஏஜிஎஸ் நிறுவனமும் படத்தின் Budget..டை காரணம் காட்டி ஒதுங்கிவிட்டனர்.
தற்போது ரவியும் பிஸியாக இருப்பதால் நேரம் வரும்போது தனி ஒருவன் 2 படத்தை பண்ணலாம் என்று கூறிவிட்டாராம்.