தொட்டியம் அருகே ஏலூர் பட்டியில் மளிகை கடையின் பூட்டை அறுத்து ரூபாய் 5 – லட்சம் கொள்ளை
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஏலூர்பட்டி சேலம் மெயின் ரோட்டில் வசிப்பவர் சேகர் மகன் விமல் ராஜ் வயது 45 இவர் ஏலூர்பட்டி கடைவீதியில் சேகர் மளிகை கடை என்ற பெயரில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு 9- மணி அளவில் வழக்கம் போல் கடையை வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார் வழக்கம் போல் இன்று காலை கடைக்கு வந்த விமல் ராஜ் கடையின் பூட்டு அறுக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின்பு கடையை திறந்து கடையின் உள் சென்று பார்த்த பொழுது சோளம் மற்றும் அரிசி கொள்முதல் செய்ய கடையில் வைத்திருந்த ரூபாய் 5- லட்சம் திருட்டுப் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்பு இந்த சம்பவம் குறிப்பு காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார் தகவலின் பெயரில் காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு உடன் வந்து சம்பவம் குறித்து மோப்பநாய் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மளிகை கடையில் புட்டை உடைத்து திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.