in

தஞ்சை பெரிய கோவில் உலக நாடக நாள் விழா

தஞ்சை பெரிய கோவில் உலக நாடக நாள் விழா

 

உலக நாடக நாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள ‌ பெத்தண்ணன்‌‌ கலையரங்கில் பறையாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

உலக நாடக நாள் என்பது ஒர் உலகளாவிய கொண்டாட்டம். மார்ச் 27ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் இந் நாளில் ஒவ்வொரு சமூகத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அதனோடு பின்னிப் பிணைந்திருக்கும் பாரம்பரிய கலைகள் மூலம் சமூகத்தில் அதன் விழிப்புணர்வு மற்றும் கலைகளை காக்கும் கலைஞர்களையும் கௌரவிக்கும் நோக்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

அதன்படி சுற்றுலாத்துறை மற்றும் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் தஞ்சாவூரில் உலக நாடக நாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோயில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கில் புகழ்பெற்ற பாரம்பரிய கலைஞர்களைக் கொண்டு பறையாட்டம், திரௌபதி துதில் தெருக்கூத்தும்‌. கடவுளும் கந்த சாமியும் என்கிற நவீன நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பாராம்பரிய கலைகளை கண்டு ரசித்தனர்.

What do you think?

கும்பகோணத்தில் தென்னக அயோத்தி இராமசாமி திருக்கோயில் இராமநவமி பெருவிழா கொடியேற்றம்

100 நாள் வேலை திட்ட நிதியான ரூபாய் 4034 கோடியை வழங்காத மத்தியரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்