in

84 ஸ்மார்ட் சிட்டிகள் பங்கேற்ற போட்டியில் தஞ்சாவூர் மாநகராட்சி முதல் இடம்

84 ஸ்மார்ட் சிட்டிகள் பங்கேற்ற போட்டியில் தஞ்சாவூர் மாநகராட்சி முதல் இடம்

 

நாடு முழுவதிலும் உள்ள 100 மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தஞ்சாவூர் மாநகராட்சி முதல் இடத்தை பெற்று 165 கோடி ரூபாய் வளர்ச்சி நிதியை பெற்றுள்ளது..

ஜெய்பூரில் நடைபெற்ற 2.0 திட்ட மாநாட்டில் தஞ்சாவூர் மாநகராட்சியை திடக்கழிவு மேலாண்மையில் தூய்மையான பகுதியாக, சுகாதாரமான பகுதியாக உருவாக்கிட தேவையான இயந்திரங்கள், ஜேசிபி இயந்திரங்கள், குப்பைகளை தரம் பிரிக்கவும் 165 கோடி ரூபாய் வளர்ச்சிக்கான நிதியாக வழங்கப்படுகிறது
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். இராமநாதன் மகிழ்ச்சி தகவல்:

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில்,

திடக்கழிவு மேலாண்மையில் நாடு முழுவதிலுமுள்ள 84 ஸ்மார்ட் சிட்டிகள் பங்கேற்ற போட்டியில்

தஞ்சாவூர் மாநகராட்சி முதல் இடத்தை பெற்றுள்ளது.

ஜெய்ப்பூரில் கடந்த 3, 4, 5 ஆகிய 3 நாட்கள் நடைபெற்ற மாநாட்டில், தமிழகத்தின் தஞ்சாவூர் மாநகராட்சி முதல் இடத்தை பெற்றுள்ளது இதன் மூலம் 2.0 திட்டத்தின் கீழ் 165 கோடி ரூபாய் வளர்ச்சி நிதி ஒப்பந்தமாகியுள்ளது.

அந்த நிதி மூலம் தூய்மை பணிக்கான பேட்டரி வாகனங்கள் உள்ளிட்ட இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்கப்பட்டு.

2026 ம் ஆண்டிற்குள் தஞ்சாவூர் மாநகராட்சியை தூய்மையான மாநகராட்சியாக ஆக்கிடுவோம் என பெருமிதத்துடன் தெரிவித்தார்…..அனைத்து மேயர்களும் இந்தி மொழியில் பேசிய நிலையில், தாம் தமிழில் பேசிய போது எழுந்த ஆரவாரத்தால் மகிழ்ச்சி அடைந்ததாக மேயர் சண்.இராமநாதன் தெரிவித்தார்.

பேட்டியின் போது துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மண்டல குழு தலைவர்கள், உள்ளிட்டோர் பங்கேற்றனர்..

What do you think?

பல்வேறு தேடுதலுக்கு பின் மனைவியிடம் கணவரை ஒப்படைத்த காரைக்கால் போலீசார்

பெண் துப்புரவாளர்களுக்கு தானாக முன்வந்து கவுரவித்த பெல்ஜியம் நாட்டு சுற்றுலா பயணிகள்