in ,

தஞ்சை மாவட்டம் திருபுவனம் அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

தஞ்சை மாவட்டம் திருபுவனம் அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா விண்ணத்திரும் முரசு மேளங்கள் முழங்க வெகு விமர்சையாக நடந்தது.

தஞ்சை மாவட்டம் திருபுவனம் அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் இக்கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா 22 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த ஜூன் 28ஆம் தேதி பால்குட அபிஷேக ஆராதனைகளுடன் தொடங்கி தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி பெருவிழா திருபுவனம் வீரசோழன் ஆற்றங்கரையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அழகு குத்தியும் கடும் விரதம் இருந்து கோயிலின் அருகில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு முரசு மேல கலைஞர்களின் விண்ணதிரும் இசை நிகழ்ச்சியும், நாதஸ்வர மேத கலைஞர்களின் இன்னிசை கச்சேரியும் கோலாகலமாக நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

What do you think?

கரூர் அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் பஜனை மடத்தில் 101 ஆஷாட ஏகாதசி விழா

அருள்மிகு காத்யாயினி உடனுறை கலயாணசுந்தரேஸ்வர்ர் சுவாமிக்கு  ஆடி மாதபிறப்பை ஒட்டி சிறப்பு அபிஷேகம்