தஞ்சை மாவட்டம் மருத்துவக்குடி அருள்மிகு ஶ்ரீ மாணிக்கநாச்சியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக வெகு விமர்சையாக நடந்தது.
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே 59 நெல் ரகங்கள் வெளியிடபட்ட பெருமைமிகு மருத்துவக்குடி தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் வேண்டுவோர்க்கு வேண்டுவன வழங்கி அருள்பாலித்து வரும் ஸ்ரீ மாணிக்கநாச்சியார் அம்மனின் ஆலயத்தை பழுது நீக்கி வர்ணகலா வேலைகள் செய்து புதுப்பித்து புதுப்பொலிவுடன். கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடந்தது.
கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு கடந்த 27ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம் மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கிராம சாந்தி வாஸ்து சாந்தி மிருத்சங்கிரகணம் உள்ளிட்ட பூஜைகளும் தொடர்ந்து மகா பூர்ணாஹீதியும் நடந்தது.
தொடர்ந்து கோயிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த யாகசாலை மண்டபத்தில் இரண்டு கால யாகசாலை பூஜைகளுடன் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலின் விமானங்களுக்கும் கும்பாபிஷேகமும் மூலவரான ஸ்ரீ மாணிக்க நாச்சியம்மன், வீரன், கணபதி, நாகதேவதை உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் மகா அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஆடுதுறை பேரூராட்சி பெருந்தலைவர் ம.க.ஸ்டாலின், ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் K .சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்