தஞ்சை மாவட்டம் வடக்குப்பட்டு கிராமம் அருள்மிகு குடுமி தேவர் பெருமான் கோவில் கும்பாபிஷேகத்தை ஓட்டி தப்பு இசை முழங்க மத்தாப்பு வேடிக்கையுடன் ஆயிரம் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் அருகே உள்ள வடக்கு பட்டு கிராமத்தில் ஸ்ரீ குடுமி தேவர் பெருமான், ஸ்ரீ சந்திரசேகர சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம நாளை காலை 9 நடைபெறுகிறது.
இதனையொட்டிகோவில் கர்ப்ப கிரகத்தில் வைக்கப்படும் சுவாமி சிலைகளை மாட்டு வண்டியில் வைத்து வான வேடிக்கைகளுடன் தாரை தப்பட்டை முழங்க ஆயிரம் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.