21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புனித நீர் யானை மீது வைத்து 18 கிராமங்களை சேர்ந்த பெண்கள் ஒரே சீருடையில் முளைப்பாரி மற்றும் பூஜைக்கு உரிய பொருட்களை ஊர்வலமாக யாகசாலை மண்டபத்திற்கு எடுத்து வந்தனர்.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம் திகழ்ந்து வருகிறது.
இந்த ஆலயத்தில் புற்று வடிவத்தில் தோன்றி காட்சி அளிப்பதால் மூலவரான அம்மனுக்கு எந்தவித அபிஷேகமும் செய்வதில்லை.
இத்தகைய சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் 21 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 10ம் தேதி நடைபெற உள்ளது.
இதனையொட்டி, புனித நீர் கலசம் யானை மீது வைத்து, மங்கள வாத்தியங்கள் இசைக்க, பெண்கள் கோலாட்டத்துடன் 18 கிராமங்களை சேர்ந்த பெண்கள் ஒரே சீருடையில் முளைப்பாரி மற்றும் பூஜைக்குரிய பொருட்களை ஊர்வலமாக யாகசாலை மண்டபத்திற்கு எடுத்து வந்தனர்.