in

சிலம்பத்தில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த தஞ்சை பள்ளி மாணவன்

எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி மட்டும் தான் எனக்கு இருந்தது. பள்ளிக்கல்வித்துறை நடத்திய விளையாட்டு போட்டிகளில் சிலம்பத்தில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த தஞ்சை பள்ளி மாணவன்.

தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவன் சுகந்தன். இவர் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். தற்காப்பு கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிலம்ப பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சிலம்பத்தில் உள்ள தீவிர ஆர்வத்தால் மாநிலம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட சிலம்பப் போட்டியில் பங்கேற்று மெடல்கள் மற்றும் சான்றிதழ்களை குவித்துள்ளார். இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை நடத்திய விளையாட்டுப் போட்டிகளில் சிலம்பப் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவன் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். சிலம்பத்தில் தனக்கு எப்படி ஆர்வம் வந்தது, சிலம்பம் மேல் இருக்கும் தனது தீராத காதலை மாணவர் அழகாக விவரித்தார்..

மாணவர் கூறுகையில்.. நான் இதுவரை பள்ளி கல்வித்துறை நடத்திய போட்டிகளில் மூன்று முறை பங்கேற்று தோல்வி அடைந்தேன். எனக்கு ஜெயிக்க வேண்டும் என்று மிகப்பெரிய வெறி இருந்தது. என்னுடைய குடும்பத்தார் மற்றும் என்னுடைய துளசிராமன் மாஸ்டர் எனக்கு பயிற்சிகளை கொடுத்துக் கொண்டே இருப்பார். காலை, மாலை என தினமும் இரண்டு நேரமும் சிலம்பம் பயிற்சி மேற்கொள்வேன்‌. என்னுடைய பெரிய தன்னம்பிக்கையால் தற்போது நான் பள்ளிக்கல்வித்துறை நடத்திய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றுள்ளேன்.

எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அடுத்து மாநில அளவில் போட்டியில் வெற்றி பெற வேண்டும், நிறைய பதக்கங்களையும், கோப்பைகளையும் பெற வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதற்கு நிச்சயம் நான் பாடுபடுவேன். எனக்கு படிப்பு மட்டும் இல்லாமல் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் அதிகம். என்று கூறினார்..‌

What do you think?

ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு சாற்ற வைர கிரீடத்தை வழங்கிய இஸ்லாமிய பக்தர்

திருப்பதி கோவிலிருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை இன்று வழங்கப்பட்டது