என் சகோதரியின் மன அழுத்தத்திற்கு அந்த சம்பவம் தான் காரணம்
பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் Jawan படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஒரு வெற்றியை கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறார்.
இவர் தனது சகோதரி குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்து தற்போது Viral ஆகி வருகிறது .
எனது சகோதரி எனது தந்தை இறந்த போது அருகிலேயே மௌனமாக நின்று கொண்டிருந்தவர் திடீரென்று மயங்கி விழுந்தார்.
அதிலிருந்து அவர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார்’ அந்த சமயத்தில் ஸ்விட்சர்லாந்தில் ஷூட்டிங்கில் இருந்த நான் அவரை ஸ்விட்சர்லாந்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றேன்.
10 வருடம் கழித்து எனது தாயாரும் இறந்து விட்டார். மீண்டும் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளானார். இத்தனை வருடத்தில் நான் கடுமையாக உழைத்து’ பேரும் புகழும் பெற்றாலும் எப்போதும் என் மனதில் தனிமையை உணர்கிறேன்.
நான் மக்கள் முன்பு தைரியசாலியாக போலியாக காட்டிக் கொண்டிருக்கின்றேன் என் சகோதரி என்றால் எனக்கும் என் பிள்ளைக்கும் உயிர் அவள் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புகின்றேன்.