அதற்காக தான் தூக்க மாத்திரைகள் எடுத்துகொண்டேன்… விளக்கம் கொடுத்த பாடகி கல்பனா
பிரபல பாடகி கல்பனா தனது ஹைதராபாத் வீட்டில் தூக்க மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டு மயங்கிய அவரை மீட்டு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.
இவர் குடும்ப பிரச்சினை காரணமாகத்தான் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் பரவியது. அது குறித்தும் தற்பொழுது விளக்கம் அளித்துள்ளார் பாடகி கல்பனா.
என்னை பற்றியும் என் கணவர் பற்றியும் சோசியல் மீடியாக்கள் பல தவறான கருத்துக்களை வெளியிடுவதை பார்க்கும் பொழுது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
இந்த வயதிலும் நான் Phd, எல் எல் பி கோர்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறேன் அதனால் எனக்கு நிறைய மன அழுத்தம் இருக்கிறது.
சில ஆண்டுகளாகவே தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்ட நான் அதற்கான சிகிச்சை எடுத்த போது எனக்கு Insominia இருப்பதாக டாக்டர் கூறினர். அதற்காக எனக்கு தூங்க மாத்திரைகள் கொடுத்தார்.
நான் 8 மாத்திரைகளை எடுத்துக் கொண்ட பிறகும் எனக்கு தூக்கம் வராததால் பத்து மாத்திரை எடுத்துக் கொண்டதால் எனது நுரையீரல் பாதிப்படைந்து சுயநினைவு இழந்து விட்டேன்.
மற்றபடி இதற்கு என் கணவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக்கும் என் கணவருக்கு கருத்து வேறுபாடும் இல்லை அவர் ரொம்ப நல்லவர் நான் மீண்டு வந்ததற்கு காரணம் என் கணவர் தான் என்னை கஷ்டப்பட்டு காப்பாற்றி இருக்கிறார்.
இப்படி ஒரு கணவர் கிடைத்ததற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் தயவுசெய்து என் கணவரை பற்றி வதந்திகள் பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.