in ,

1000 ஆண்டு பழமை வாய்ந்த பூமீஸ்வரர் ஆலயத்தில் மழைநீர் தேங்கி பக்தர்கள் கடும் அவதி

1000 ஆண்டு பழமை வாய்ந்த பூமீஸ்வரர் ஆலயத்தில் மழைநீர் தேங்கி பக்தர்கள் கடும் அவதி

 

மரக்காணத்தில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த பூமீஸ்வரர் ஆலயத்தில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி பக்தர்கள் கடும் அவதி.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூமீஸ்வரர் ஆலயத்தில் முழங்கால் அளவிற்கு மழைநீர் ஆனது தேங்கி நிற்கிறது.

இதனால் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அது மட்டுமல்லாமல் இக்கோயிலை புனரமைக்கும் பணியானது தற்போது நடைபெற்று வருவதால் தரைத்தளத்தில் ஆங்காங்கே கற்கள் கொட்டி வைத்துள்ளனர்.

இங்கு முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி நிற்பதால் பக்தர்கள் மிகவும் ஆபத்தான சூழலில் கோவிலின் உள்ளே நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மழையின் போது இக்கோவிலில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பது வழக்கமாக இருக்கிறது.

இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

What do you think?

செல்லிப்பட்டு படுகை அணையில் மழை நீர் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் வேதனை

திண்டிவனம் ஜெயபுரம் அருள்மிகு ஜெயமுத்துமாரியம்மன் ஆலயத்தில் 58- ஆம் ஆண்டு ஆடிப்பெருவிழா மஞ்சள் நீராட்டு விழா