குத்தாலம் அல் மத்ரஸா மன்பவுல் ஹஸனாத் அரபி பாடசாலையில் 31 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அல் மத்ரஸா மன்பவுல் ஹஸனாத் அரபி பாடசாலையில் 31 ஆம் ஆண்டு விழா ஜாமி ஆ மஸ்ஜித் நாட்டாமை பஞ்சாயத்தார்கள் தலைமையில் நடந்தது சிறப்பு அழைப்பாளர்களாக முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நாட்டான்மை பஞ்சாயத்தார்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மதரஸாவில் பயின்று வரும் மாணவ மாணவிகள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சூராக்கள் பார்க்காமல் மனப்பாடம் செய்து ஓதி காண்பித்தனர்.
பின்னர் பங்கேற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் ஜமாத்தார்கள் பரிசுகள் வழங்கினர். இதில் பெற்றோர்கள் ஆண்கள் பெண்கள் என திரளாக கலந்து கொண்டனர்.