மதுரை சோழவந்தான் அருகேதிருவேடகம் ஏடகநாதர் கோவிலில் 32 ஆம் ஆண்டு தெப்பத் திருவிழா
மதுரை சோழவந்தான் அருகேதிருவேடகம் ஏடகநாதர் கோவிலில் 32 ஆம் ஆண்டு தெப்பத் திருவிழா ஆயிரக்கணக்கானோர் வெப்பத்தை சுற்றி வந்து ஏடகநாதரை தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேதிருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவில் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும் இதில் வருடந்தோறும் தை மாதம் தெப்பத் திருவிழா நடைபெறும்.
இதே போல் இந்த ஆண்டும்நேற்று காலை சுவாமியும் அம்பாளும் திருக்கோவில் இருந்து பிரம்மதீர்த்த தெப்பத்திற்கு அழைத்து வந்தனர்.
மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை உலக நன்மைக்காக சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாரதனை நடைபெற்றது.
சுவாமியும் அம்பாளும் வெள்ளி சப்பரத்தில் மின்னலங்காரத்தில் தெப்பத்தை வளம் வந்து நான்காவது வீதிகளில் உலா வந்தனர் வழி நெடுக கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் சுவாமி அம்பாளை வரவேற்று பூஜைகள் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் விழா குழு செய்து இருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.