ஸ்ரீ காமாட்சி அம்மன் திருவாசக முற்றோதல் பேரவையின் 500 ஆவது திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது
காஞ்சிபுரம் சித்தீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருவாசக முற்றோதல் பேரவையின் 500 ஆவது திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.
காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் அமைந்துள்ள சித்திஸ்வரர் ஆலய வளாகத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மை திருவாசக முற்றோதல் பேரவையின் 500 ஆவது திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மூத்த புலவர் சரவண சதாசிவம் நால்வர் நற்பணி மன்றத்தை சேர்ந்த டிஎஸ்பி வேளியப்பன். வள்ளலார் மன்றத்தைச் சேர்ந்த ஜோதி கோடீஸ்வரன் தெய்வத்தமிழ் மாமன்றத்தைச் சேர்ந்த ராமலிங்கம் பேராசிரியர் சிவ சாமுண்டீஸ்வரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இவர்களுக்கு சிவ வசந்தா தலைமையில் பொன்னாடைகள் அணிவித்து கௌரவிக்கப்பட்டது
மேலும் 109 சிவ பக்தர்களுக்கு சான்றுகளும் பொன்னாடைகளும் வழங்கப்பட்டு அன்னம் பாலிப்பும் நடைபெற்றது நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவ வசந்தா சிவ பக்தர்களுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தார்.