பாபநாசத்தில் புதுமை புனித அந்தோணியார் ஆலயத்தின், 58ம் ஆண்டு ஆடம்பர தேர்பவனி விழா
திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கோலாகலமாக கொண்டாடினர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா காப்பான் தெருவில் அமைந்துள்ள புதுமை புனித அந்தோணியார் ஆலயத்தின் 58-ம் ஆண்டு ஆடம்பர தேர்பவனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழா கடந்த 11ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து ஆடம்பர தேர்பவனி விழா விமர்சையாக நடைபெற்றது.
இதையொட்டி, பங்குத்தந்தைகள் மரிய பிரான்சிஸ் , ஜோசப் அருள் ஜெபஸ்டின் ஆகியோர் முன்னிலையில், சிறப்பு கூட்டுப்பாடல், திருப்பலி ஆகியவை நடைப்பெற்று.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகளாலும், மலர்களாலும் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்ட ஆடம்பர தேர் புனிதம் செய்யப்பட்டு, புனித அந்தோனியாருக்கு பூ போடும் நிகழ்ச்சியும் நடைப்பெற்று முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
தொடர்ந்து வாணவேடிக்கையுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாபநாசம் புதுமை புனித அந்தோணியார் ஆலயத்தின் கிராம மக்கள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை காப்பான்தெரு கிராம நாட்டாமைகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.