70 உயரத்தில் அமைக்கப்பட்ட சப்தமுக கணபதி ஷோபா யாத்திரை துவக்கம்
ஹைதராபாத்தில் உள்ள கைராதாபாத்தில் 70 உயரத்தில் அமைக்கப்பட்ட சப்தமுக கணபதி ஷோபா யாத்திரை துவக்கம்.
ஹைதராபாத்தில் ஷோபா யாத்திரை என்ற பெயரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிலைகளை உசேன் சாகர் ஏரிக்கு ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கும் வரைக்கும் கணேஷ் நிமஞ்ஜனம் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.
ஹைதராபாத், செகந்திராபாத் ஆகிய இரட்டை நகரங்களில் பிரம்மாண்டமான உயரம் முதல் சிறிய உயரம் வரை அமைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகளின் ஷோபா யாத்திரை தற்போது நடைபெறுகிறது.
ஷோபா யாத்திரையின் ஒரு பகுதியாகபகுதியாக ஹைதராபாத்தில் உள்ள ஹைரதாபாத்தில் 70 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான சப்த முக கணபதி சிலையை இன்று காலை சூப்பர் கிரேன் மூலம் தூக்கி பெரிய லாரியில் நிலைநிறுத்தினார்கள்.
தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட சப்தமுக கணபதி உசேன் சாகர் ஏரியை நோக்கி ஊர்வலமாக சென்று கொண்டிருக்கிறார்.
நிகழ்ச்சியில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பாதுகாப்புக்காக 700 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர ஹைதராபாத்தில் உள்ள பாலாப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட புகழ்பெற்ற விநாயகர் சிலைகளும் தற்போது சோபா யாத்திரையாக உசேன் சாகர் ஏரியை நோக்கி சென்று கொண்டுள்ளன.
உஷேன் சாகர் ஏரியில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை தூக்கி கரைப்பதற்காக சூப்பர் கிரேன்களை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் பிரம்மாண்ட விநாயகர்களுக்கு படைக்கப்பட்ட லட்டு ஏலம் நடைபெற உள்ளது.