திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சிறைச்சாலையில் நாட்டின் 76 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்திய நாட்டின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருவடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவிடைமருதூர் வட்டாட்சியர் பாக்யராஜ் தலைமையில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது அலுவலக வாயிலில் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்பட்டது தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதேபோன்று திருவிடைமருதூரில் உள்ள கிளை சிறையில் சிறை அதிகாரி செந்தில்குமார் தலைமையில் நடந்த குடியரசு தின விழாவில் சிறைச்சாலை வாயிலில் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில் மூவர்ண கொடியை சிறை அதிகாரி செந்தில்குமார் ஏற்றி வைத்தார். திருவிடைமருதூர் வட்டாட்சியர் பாக்யராஜ் மற்றும் கிளை சிறையில் உள்ள 20க்கும் மேற்பட்ட கைதிகள் இதில் பங்கேற்றனர்.