ஏவிசி கல்லூரியில் 76-வது குடியரசு தினவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் 76-வது குடியரசு தினவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் ஆர்.நாகராஜன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான கே. வெங்கடராமன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து என்.சி.சி மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு சுதந்திர தின வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர் என்சிசி மாணவர்களின் சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர். இதில் தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் ஜி.ரவிசெல்வம் துணை முதல்வர் எம். மதிவாணன், டீன் எஸ். மயில்வாகனன், என்சிசி அதிகாரி டாக்டர் சி.பாலாஜி மற்றும் பலதுறை பேராசிரியர்கள், என்.எஸ்.எஸ் மற்றும் என்சிசி சார்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.