77வது கேன்ஸ் திரைப்பட விழா பிரமாண்ட தொடக்கம்
77வது கேன்ஸ் திரைப்பட விழா பிரமாண்டமாக தொடங்கியது. ஆஸ்கார் விருதுக்கு அடுத்து உலக அளவில் பிரமாண்டமான நிகழ்வு ஒன்று உண்டு என்றால் பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழா தான்.
1946 ஆம் ஆண்டிலிருந்து இந்த விழா நடைபெற்று வருகிறது. மதிப்புமிக்க திரைப்பட விழாவான கேன் திரைப்பட விழாவில் உலக அளவில் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பல திரை பிரபலங்கள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டு சிவப்பு கம்பளத்தை அலங்கரிக்க ஐஸ்வர்யா ராய் பச்சன், அதிதி ராவ், சோபிதா, தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
தொடக்க மற்றும் நிறைவு விழாவை பிரெஞ்சு நடிகை கேமில் கோட்டின் தொகுத்து வழங்குகிறார்.
மேலும் ராதிகா ஆப்தே நடித்த சிஸ்டர் மிட் நைட் உள்ளிட்ட ஏழு படங்கள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது .
கேன்ஸ் திரைப்பட விழா மே 15ஆம் தேதி இரவு இந்திய நேரப்படி 7. 15 மணிக்கு கோலாகோலமாக தொடங்கியது. இந்த விழாவின் தொடக்கத்தில் மீ டூ இயக்கம் பற்றி விவாதிக்கப்பட்டது பல நல்ல விஷயங்களை திரைப்படம் மூலம் இந்த சமூகத்திற்கு கொடுக்கும் இந்த துறை சரியான பாதையில் செல்ல வேண்டும் என்று கிரேட்டா கெர்விக் …கருத்துக்களை முன் வைத்தார்கள்.