in

மனித வள அதிகாரிகள் சங்கத்தின் 8ம் ஆண்டு கூட்டம் புதுச்சேரியில் நடந்தது

மனித வள அதிகாரிகள் சங்கத்தின் 8ம் ஆண்டு கூட்டம் புதுச்சேரியில் நடந்தது

 

புதுச்சேரியில் நடந்த மனித வள அதிகாரிகளின் 8ம் ஆண்டு கூட்டத்தில் பார்வையற்ற மாணவி, சமூக ஆர்வலர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

மனித வள அதிகாரிகள் சங்கத்தின் 8ம் ஆண்டு கூட்டம் புதுச்சேரியில் நடந்தது.

பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு உயர் கல்வி படிப்பு மற்றும் வேலை வாய்ப்புக்கு வழிகாட்டும் பயிற்சி இக்கூட்டத்தில் நடத்தப்பட்டது.

மேலும் லெனோவா தொழிற்சாலை இயக்குனர் ஸ்ரீகாந்த், சவ்வைரா இந்தியா நிறுவன செயல் அதிகாரி சிவஞானம் ஆகியோர் மனித வள அதிகாரிகளின் மேம்பாடு குறித்து சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியின் முடிவில் 10 ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற பார்வையற்ற மாணவி சண்முகப்பிரியா கவுரவிக்கப்பட்டார்.அவரது எதிர்கால படிப்பிற்கு வங்கியில் வைப்பு தொகையை
மனித வள அதிகாரிகள் சங்கம் செலுத்தி அதற்கான ஆவணங்களை அளித்தது.

இதே போல் சமூகத்தில் சிறப்பு சேவையாற்றுபவர்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மனித வள வல்லுநர்கள் கலந்து கொண்டனர்..

What do you think?

காரணமாக 50 ஏக்கர் நெல்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை

திருக்கை மீன் குஞ்சுகள், நண்டுகள் இறந்து கரை ஒதுங்கி உள்ளதால் பரபரப்பு….