செப்பரை அழகிய கூத்தா் காா்த்திகை திருவாதிரை அபிஷேகம் வெகு விமா்சையாக நடைபெற்றது. திரளான பக்தா்கள் தாிசனம்.
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பழமையான திருக்கோவில் அழகிய கூத்தா் (நடராஜா்) திருக்கோவில். இங்கு மூலவராக நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் அருள்பாலிக்கின்றனா். ஹிரண்யவர்மன் என்கிற சோழ மன்னனின் காலத்தில் செய்யப்பட்டது இங்கு உள்ள நடராஜா் திருஉருவம். இந்த நடராஜ மூர்த்தியின் அழகினைக் கண்டு, மன்னன் அழகிய கூத்தர் என உருகினான். அதுவே இறைவனின் திருப்பெயராக விளங்கி நின்றுவிட்டது.
ஆடல் வல்லானாகிய செப்பரை நடராஜருக்கு காா்த்திகை திருவாதிரை திருமஞ்சனம் இன்று நண்பகலில் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக சங்கு மற்றும் கலசங்கள் கொண்டு பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து சபை நடுவில் ஏழுந்தருளிய நடராஜருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் மாபொடி,மஞ்சள்பொடி,வாசனைபொடி. பால். தயிா், தேன், பஞ்சாமிருதம், அன்னம். இளநீா், வீபூதி, சந்தணம் போன்ற 16 வகையான பொருள்கள் கொண்டு அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
நிறைவாக சங்கு அபிஷேகமும் அதனை தொடா்நது மகா அபிஷேகமும் நடைபெற்றது. பின்னா் நடராஜா் சிவகாமி அம்பாளை கா்ப்பகிரஹத்தில் எழுந்தருள செய்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து அா்ச்சனை நடைபெற்று நட்சத்திர ஆரத்தி கோபுர ஆரத்தி சோடச உபசாரங்கள் நடைபெற்றன. நிறைவாக வேத பாராயணம் பஞ்ச புராணம் பாடி கற்பூர ஆரத்தி நடைபெற்றது. நடராஜா் அபிஷேகத்தை திரளான பக்தா்கள் தாிசனம் செய்தனா். வந்திருந்த பக்தா்களுக்கு பிரசாதமாக அன்னதானம் பஞ்சாமிருதம் வழங்கப்பட்டது.