16 வருடங்களுக்குப் பிறகு காதலித்த பெண்ணை திருமணம் செய்த நடிகர்
16 வருடங்களுக்குப் பிறகு தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்த மலையாள நடிகர் தர்மஜன் போல்காட்டி.
இவரும் கொச்சியை சேர்ந்த அனுஜாவுக்கும் 16 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்டது பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறி தர்மஜன் போல்காட்டியுடன் வாழ்கையை ஆரம்பித்தார்.
இவர்களுக்கு வேதா, வைக்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தர்மன் மனைவி அனுஜா உடன் கொச்சியில் இருக்கும் கொங்கேர்பள்ளி மகாதேவர் கோவிலுக்கு சென்றவர் மகள்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றி முறைப்படி திருமணம் செய்தனர்.
அதன்பிறகு கொங்கேர்பள்ளி ரெஜிஸ்டர் ஆபீஸ்ல் தங்களது திருமணத்தை தயாரிப்பாளர் என் எம் பாதுஷாவின் மனைவி மஞ்சு மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பதிவு திருமணமும் செய்து கொண்டார்.
இது குறித்து தர்மஜன் கூறியதாவது 16 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்த என் மனைவியை மகள்களின் வேண்டுகோள் படி முறையாக திருமணம் செய்து கொண்டேன்.
ஆனால் இதை பார்ப்பதற்கு என் தாய் தந்தை இல்லை என்று வருத்தத்துடன் கூறினார்.