புற்றுநோயின் முன்றாம் நிலையில் தவிக்கும் நடிகை
ஹிந்தி நடிகை Hina Khan,(ஹினா கான்) தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர்.
நாகினி தொடரில் நடித்த பிறகு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகியது. இவருக்கு புற்றுநோய் மூன்றாம் நிலையில் இருப்பதாகவும் அதற்காக கீமோதெரபி சிகிச்சை எடுத்து வருவதாகவும் அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
இந்த சிகிச்சை மேற்கொண்டதன் காரணமாக இவருக்கு தற்பொழுது Mucositis நோய் தாக்கி இருப்பதாகவும் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து வருவதாகவும்.
இந்த நோய் தாக்கியிருப்பவர்கள் யாரேனும் சிகிச்சை எடுத்துக் கொண்டால் தனக்கும் அந்த சிகிச்சை பற்றிய தகவலை அறிவிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.