வேதாரண்யம் அருகே ஒளவையார் கோவில் ஆண்டு திருவிழா – அரசு சார்பில் நடைபெற்றது
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த துளசியாப்பட்டினம் கிராமத்தில் தமிழ் புலவர் ஒளவையாருக்கு என்று தமிழ் நாட்டிலேயே இங்கு மட்டும் தான் தனி கோவில் அமைந்துள்ளது என்பது சிறப்புடையதாகும் ஒளவையார் கோவிலின் 50-ஆம் ஆண்டு திருவிழாவை தமிழ் நாடு அரசு சார்பில் அரசு விழாவாக நடைபெற்றது.
இதில் ஒளவையார் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
இந்த விழாவில் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் இந்த ஆண்டு எளிமையான முறையில் திருவிழா நடைபெற்றது.