அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழா
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 63 – வைணவ தலமாக விளங்கும் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில் சிதிலமடைந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த திருக்கோயில் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஜிகே ரியல்டி டெவலப்பர்ஸ், இமயம் குரூப்ஸ் என்ற தனியார் நிறுவனம் மூலமாக ரூபாய் 3.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக புறனமைப்பு பணிகள் பழமை மாறாமல் நடைபெற்று முடிவுற்ற நிலையில், குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது,
கடந்த செவ்வாய்க்கிழமை, முதல் கால யாக பூஜைகளுடன் துவங்கியஇவ்விழா, புதன்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையும் மாலை மூன்றாம் கால யாக பூஜையும் அதனைத் தொடர்ந்து அதிகாலை நான்காம் கால யாக சால பூஜைகள் முடிவுற்ற நிலையில், கலச புறப்பாடு நடைபெற்று காலை 8.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது, கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்ட போது கோவிந்தா கோவிந்தா என கோஷத்துடன் பரவசமடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.