எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காகன வேலையை பாஜக அரசு செய்து வருகிறது
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வருகை தந்தார் அப்போது செய்தியாளர் சந்தித்த அவர் தெரிவித்ததாவது.
என்.ஐ.ஏ என்பது டெரரிசம் எதிர்ப்பாக நடக்கும் செயல்களை தடுக்குவதற்காகவும், பின்பு அதன் விளைவுகளை விசாரிக்கவும் அதை வைத்து அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், முதல்வர் மீது விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்கிறார் என்றால் அரசியலுக்காக தான் பழிவாங்குவது ன்பது தான் அர்த்தம்.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டியே திருவோம் என்பது கர்நாடகா அரசின் முடிவு. தமிழ்நாட்டில் தமிழக அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு தமிழக காங்கிரஸ் கட்சி ஒத்துழைக்கும், தமிழக உரிமைகளை பாதுகாக்க தமிழக காங்கிரஸ் உறுதுணையாகவும் இருக்கும்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்று இலக்க எண்ணை எட்டாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறித்து கேள்விக்கு வருகின்ற ஜூன் 4ம் தேதி தெரியும் என்றும் ஆசை ,பேராசை, கற்பனைக்கு எல்லாம் இப்போதைக்கு பதில் சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.
நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது இது தற்கொலையா? கொலையா என காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறது. வெள்ளியங்கிரி, மருதமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் யானைகள் வழித்தடம் என தமிழக அரசு பரிந்துரைந்துருப்பது குறித்த கேள்விக்கு :-
பார்லிமென்டில் பலமுறை பேசி இருக்கேன் என்றும் கண்டிப்பாக யானைகளுக்கான வழித்தடம் வேண்டும் என்றும் இன்றைக்கு இருக்கிற வளர்ச்சியின் காரணமாக, மக்கள் தொகை பெரும் காரணமாக , நகரங்கள் வளர்ச்சி தொழில் வளர்ச்சி காரணமாக யானைகளின் பாதுகாப்பிற்காகவும் யானைகளின் வழித்தடங்களுக்காகவும், தொடர்ந்து யானைகளை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தால் அதை வரவேற்கிறேன் என்றும் அதே போல விவசாயிகள் கோரிக்கை என்ன என்பதை அறிந்து அவர்களுக்கு தேவையான செய்து கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டதில் காவி வண்ண ம் இருப்பதற்கு குறித்து தெரிவித்த கார்த்தி சிதம்பரம் இந்திய கிரிக்கெட் அணிக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் சம்பந்தமில்லை என்றாலும் அதை இயக்குவது எந்தக் கட்சியின் கீழ் இருக்கின்றது என்றும் அனைவருக்கும் தெரியும் இந்திய அணியின் ஜெர்சி ப்ளூ வண்ணம் அதை மாற்ற தேவையற்றது என்றும் தெரிவித்தார்.
கஞ்சா பழக்கம் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் பல மாநிலங்களில் புழக்கத்தில் இருக்கிறது. என்றும் இதை சட்டரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் ஆலோசனை செய்து இதை மருத்துவ சமுதாய பிரச்சனையாகவும் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காகவும் பாஜகவுக்கு எதிராக செயல்படும் தலைவர்களை சட்ட சிக்கல்கள் சிக்க வைத்து செயல்படாமல் ஆக்குவதற்காக வேலையை பாஜக அரசு செய்து வருவதாக பழனியில் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.