in

புதுச்சேரி பாரதி ஜனதா படுதோல்விக்கு பொறுப்பேற்று பாஜக தலைவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும்


Watch – YouTube Click

புதுச்சேரி பாரதி ஜனதா படுதோல்விக்கு பொறுப்பேற்று பாஜக தலைவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும்

 

புதுச்சேரி பாரதி ஜனதா படுதோல்விக்கு பொறுப்பேற்று பாஜக தலைவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேட்டி.

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு நிறைவு விழாவை ஒட்டி புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாள் கால்பந்தாட்ட போட்டி தொடங்கியது.

இதில் கலந்துகொண்ட மாநில அமைப்பாளர் சிவா போட்டியை தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடிக்காததால் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியை திரும்ப அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் மெத்தன போக்கே காரணம் என்று சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்து பேசியவர்

ஒரு கட்சியின் தோல்விக்கும் வெற்றிக்கும் மாநில தலைமை தான் பொறுப்பேற்க வேண்டும், இதில் எந்த விதத்திலும் தட்டிக் கழிக்க முடியாது. பாஜக விற்கு ஏற்பட்ட நிலை திமுகவிற்கு இருந்திருந்தால் முதலில் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்திருப்போம் என்றார்.


Watch – YouTube Click

What do you think?

திருச்சியில் மேற்கூரை இடிந்து விழுந்து முதியவர் பலி

மத்தியில் அமைய உள்ள மோடியின் ஆட்சி குறை பிரசவ ஆட்சி, 5 வருடம் நீடிக்காது