in

புதுச்சேரி சிறுமியின் உடல் கண்ணீர் மல்க நல்லடக்கம் செய்யப்பட்டது


Watch – YouTube Click

புதுச்சேரி சிறுமியின் உடல் கண்ணீர் மல்க நல்லடக்கம் செய்யப்பட்டது

 

புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமியை கொடூரமாக பாbrock purdy jersey keyvone lee jersey penn state jersey fsu jersey kansas state football uniforms penn state jersey brandon aiyuk jersey miami hurricanes jersey florida jersey justin jefferson lsu jersey brock purdy jersey miami hurricanes jersey keyvone lee jersey aiyuk jersey deuce vaughn jersey லியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கருணாஸ்(19), விவேகானந்தன்(57) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை புதுச்சேரி அரசு நேற்று அமைத்தது.

இதையடுத்து சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை சிறப்புக் குழு பெற்றுக்கொண்டு, விசாரணையை இன்று காலை தொடங்கியுள்ளது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட 9-வயது சிறுமியின் உடல் அடக்கம் செய்வதற்கான இறுதி ஊர்வலம் காலை தொடங்கியது. இறுதி ஊர்வல வாகனத்தில் சிறுமியின் உடலுக்கு அருகே புத்தகங்கள், விளையாட்டு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. சிறுமியின் உடலுக்கு வழிநெடுகிலும் நின்று மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் உட்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

பாப்பம்மாள் கோவில் இடுகாட்டில் சிறுமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. சிறுமி ஆசையாக பயன்படுத்திய பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், உடைகள் உடலுடன் புதைக்கப்பட்டன.


Watch – YouTube Click

What do you think?

ஒட்டுநர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பாராட்டு மழையில் நனைத்த அமைச்சர்

அமைச்சரிடம் கலைஞர் கருணாநிதியின் ஓவியத்தை பரிசாக வழங்கிய பள்ளி மாணவன்