in

திருநெல்வேலி மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

திரு. தங்கபாண்டியன் வயது 40 இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வசித்துவருகிறார் . இவர் மனைவி பெயர் பார்வதி , இவருக்கு ஒரே மகன் உண்டு. இவர் மும்பையில் உள்ள அவரது அப்பா உணவகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்த போது 18.11. 2024 அன்று சுமார் இரவு 11:00 மணியளவில் ரயில்வே நிலையம் அருகில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு இவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

18 /11 /2024 அன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் மோசமான நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர் மற்றும் 20/11/2024 அன்று மூளை செயல்பாடு இருப்பதை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையின் அறிக்கையில் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை அவருடைய உறவினரிடம் மருத்துவர்கள் தெளிவாக எடுத்துரைத்தனர்.

பின்பு தாமாக முன்வந்து அவருடைய உறவினர்கள் உடல் உறுப்புகளான சிறுநீரகங்கள் மற்றும் தோல், கருவிழிகள் தானமாக அளிப்பதற்கு முன் வந்தனர். 21.11.2024 அன்று அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து உடற்கூறாய்வு செய்யப்பட்டு அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செய்யப்பட்ட பின்னர் 21/11/2024 அன்று காலை சுமார் 11:30 மணியளவில் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது .

What do you think?

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 21.11.2024