என்னை கொடுமை படுத்திய காதலன்…. யார் அவர்… பதிலளிப்பாரா ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா ஜெரெமையா பின்னணிப் பாடகியும் பின்னணிக் குரல் கொடுப்பவரும் நடிகையும் ஆவார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா, ஆதவன் படத்தில் ஏனோ, ஏனோ, வேட்டையாடு விளையாடு படத்தில் கற்க கற்க, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா போன்ற பாடல்களை பாடியவர் ஆண்ட்ரியா,. இவர் பாடுவதில் மட்டும் வல்லவர் அல்ல பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார். ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கும், வேட்டையாடு விளையாடு படத்தில் கமாலினி முகர்ஜிக்கும், நண்பன் படத்தில் இலியானாவுக்கும் பின்னணி குரல் கொடுத்தவர் ஆண்ட்ரியா அதுமட்டுமின்றி நடிகையாகவும் பச்சைக்கிளி முத்துச்சரம், வட சென்னை, ஆயிரத்தில் ஒருவன், அரண்மனை 3, விஸ்வரூபம் என பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.
பாடகியாக இருந்த போது ஆண்ட்ரியா, இசையமைப்பாளர் அனிரூத்தை காதலித்து இருக்கிறார். அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையானது. ஆனால் நீண்ட நாட்கள் அவர்களது காதல் நீடித்திருக்கவில்லை. மிக விரைவிலேயே பிரேக்கப் ஆகிவிட்டது.
இதையடுத்து ஆண்ட்ரியா இன்னொருவருடன் ரிலேஷன்சிப்பில் இருந்த நிலையில், அதுவும் பிரேக்கப் ஆனது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஆண்ட்ரியா, கடந்த சில ஆண்டுகளில் திருமணம் செய்துக்கொண்ட சிலர் மகிழ்ச்சியாக இல்லை.
திருமணம் செய்யாமல் பலர், மகிழ்ச்சியாக வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.
நான் காதலித்த போது எனது முன்னாள் காதலர் என்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தினார். அதனால் நான் கடுமையான மன உளைச்சலில் தவித்தேன்.
அதனால்தான், தமிழ் சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தேன், என்று வருத்தமுடன் கூறியிருக்கிறார். ஆண்ட்ரியாவை கொடுமைப்படுத்திய அவரது முன்னாள் காதலன் யாராக இருக்கும் என்ற கேள்வியை தான் வலைதளங்களில் ரசிகர்கள் தேடுகிறார்கள்