in ,

சீனிவாச பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழா நிறைவாக தீர்த்த வாரி நடைபெற்றது

சீனிவாச பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழா நிறைவாக தீர்த்த வாரி நடைபெற்றது

 

விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழா நிறைவாக தீர்த்த வாரி நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் பிரமோற்சவ விழா நிறைவாக தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடைபெற்று வருகிறது இந்த ஆண்டு இவ்விழா கொடியேற்றுடன் துவங்கி நடைபெற்று வந்தன விழா நாட்களில் உற்சவர் பெருமாள் தாயாருடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் நிறைவாக கோவில் மண்டபத்தில் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றன முன்னதாக மூலவர் சீனிவாச பெருமாள் ஸ்ரீ பத்மாவதி தாயார் உற்சவர்கள் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களை எழுந்தருள செய்து திருமஞ்சன பொடி, மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பலவகையான நறுமண தெய்வீகங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதனை அடுத்து  வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று உற்சவர் மற்றும் மூலவர் தெய்வங்களுக்கு கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து உற்சவர் பெருமாளை பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் துளசியால் அர்ச்சனைகள் செய்து தீப ஆராதனை காட்டினர் பெருமாளை மூன்று முறை மூழ்கி எடுத்து தீர்த்தவாரி வைபவத்தை நடத்தினர் நிறைவாக தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து நட்சத்திர தீபம் அலங்கார தீபம் கும்ப தீபம் ஏக முகதீபம் காண்பித்து துளசியால் அர்ச்சனைகள்  செய்து பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் தாயாரை வழிபட்டனர்.

What do you think?

விஞ்ஞான உலகில அடிப்படை வசதிகளே இல்லாத கிராமம்… மக்கள் அவதி…

பழனி மலைக்கோவிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சாமி தரிசனம்