லஞ்சம் பெற்ற அலுவலர் கையும் களவுமாக பிடித்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆத்துரை கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் தன் தந்தை சேகரிடம் கிரயம் பெற்ற 50 சென்ட் நிலத்தை பட்டா மாற்றம் செய்ய இ.சேவை மையம் மூலம் பதிவு செய்துள்ளார்
இந்நிலையில் பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன், மற்றும் கிராம உதவியாளர் பூங்கொடி இருவரும் போட்டிபோட்டு மாணிக்த்திடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என கெடுபிடி காட்டியுள்ளனர்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத மாணிக்கம் இது குறித்து திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் வேல்முருகனிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் காவல்துணை கண்காணிப்பாளர் வேல்முருகன், ஆய்வாளர் மைதிலி, சப் இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன் மாணிக்கத்திடம் சேத்துப்பட்டு டவுன் செஞ்சி சாலையில் பணம் பெறும் போது கையும் களவுமாக பிடித்து சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடந்தி வருகின்றனர்.
கடந்த 3-ந் தேதி பட்டா பெயர் மாற்றப்பட்ட நிலையில் கிராம நிர்வாக அதிகாரி சிலம்பரசன் தைரியமாக மாணிக்கத்திடம் பணம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.