குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோயிலில் ப்ரும் மோத்ஸவ கொடியேற்ற விழா நடைபெற்றது
திருச்சி மாவட்டம் குணசீலத்தில் அமைந்துள்ளது பிரஸன்ன வேங்கடாஜலபதி திருக்கோயில். இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் சங்கு சக்கரதாரியாய் திருமார்பில் இலக்குமி துலங்க இ கையினில் செங்கோல் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்டோர் 48 நாட்கள் விரத முறைப்படி வணங்கினால் வினைகள் யாவையையும் கடவுள் கருணையினாலே போக்கி அருள் புரிகின்றனர். தென் திருப்பதி என்று இத்தலம் அழைக்கப்படுகிறது.
இத்திருக்கோயிலில் ப்ரும் மோத்ஸவ விழாவானது இன்று கொடியேற்றம் கொடிமரத்தில் கருட கொடியானது ஏற்றப்பட்டது.மேலும் இன்று முதல் ஒவ்வொரு நாளும் அன்ன வாஹனம், சிம்ம வாஹனம், அனுமந்த வாகனம், கருட வாகனமும் வீதியுலா நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற 12ம் தேதி நடைபெற உள்ளது. கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.