இராட்டினமங்கலத்தில் காளைவிடும் விழாவில் துள்ளி குதித்து ஓடிய காளைகள்
ஆரணி அருகே அனுமதியின்றி நடைபெற்ற காளைவிடும் விழாவில் துள்ளி குதித்து ஓடிய காளைகள்.. காளை முட்டியதில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காயம்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இராட்டினமங்கலம் கிராமத்தில் அனுமதியின்றி காளை விடும் திருவிழா காலை 8 மணி முதல் வெகு விமர்சையாக நடைபெற்றது..
இந்த காளை விடும் திருவிழாவில் வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஒசூர் உள்ளிட்ட மாவட்டங்களிருந்தும் ஆந்திரா கேரளா மாநிலங்களிருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று வாடிவாசலில் துள்ளி குதித்து ஓடிய காளைகளை உற்சாகமாக காளைபிடி வீரர்கள் பங்கேற்று உற்சாகப் படுத்தினார்கள்..
மேலும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடையும் காளைக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும் இரண்டாவது பரிசாக 50ஆயிரம் மூன்றாவது பரிசாக 40 ஆயிரம் ரூபாயும் என 50க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டது..
இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர்…
மேலும் காளை விடும் திருவிழாவில் சுமார் 50-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்..
மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க ஆரணி காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..
மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காளை விடும் திருவிழாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மட்டும் காளை விடும் திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கப்படாத நிலையில் இன்று காலை 8 மணி முதல் ஆரணி அருகே அனுமதி இன்றி காளை விடும் திருவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது…