பேருந்து நிலையத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும் – டாக்டர் ராமதாஸ் பேட்டி
திண்டிவனத்தில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வருகின்ற பேருந்து நிலையத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும் – திண்டிவனத்தில் பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பேட்டி.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார் .
அப்பொழுது அவர், ஆண்டு தோறும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு உயர்த்த முயற்சி செய்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தியதன் பேரில் வீடுகளுக்கு மின் கட்டண உயர்வை தமிழக அரசு ரத்து செய்த நிலையில் மின்வாரியத்தில் நடக்கின்ற ஊழல்களை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதே போன்று திமுக தேர்தல் வாக்குறுதிகளாக 510 வாக்குறுதிகள் அளித்த நிலையில் அதில் 10% கூட இதுவரையில் நிறைவேற்றவில்லை. இருப்பினும் 90 சதவிகிதம் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக தமிழக முதல்வரும், தமிழக அமைச்சர்களும் தம்பட்டம் அடித்து கொள்கின்றார்கள் என்று கூறிய டாக்டர் ராமதாஸ்.
தேர்தல் நடைபெற்று மூன்று ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் தேர்தல் வாக்குறுதிகளில் இதுவரையில் 90 சதவிகித தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்தார்..
பொதுமக்களின் முக்கிய தேவைகளான சாதிச் சான்று, இறப்பு சான்று, வாரிசு சான்று , இருப்பிடச் சான்று உள்ளிட்ட சான்றிதழ் பெறுவதற்காக ரூபாய் 5000 முதல் 10 ஆயிரம் வரையில் லஞ்சம் கொடுக்கின்ற ஏற்பட்டுள்ளது.
லஞ்சம் பெற்ற பிறகும் சான்றிதழ்கள் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது அவமானத்துக்குரிய செயலாகும் .
எனவே, அண்டை மாநிலங்களில் 20 மாநிலங்களில் பொது சேவை தரும் உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ளது இதே போன்று தமிழகத்திலும் பொது சேவை உரிமைச் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.
மேலும் அவர் பேசும் போது, நடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற மழையின் காரணமாக விழுப்புரம் பேருந்து நிலையம் மழை நீரில் கத்தலிக்கின்றது. அந்த மழை நீரை வெளியேற்ற கூட வசதி இல்லாத நிலை விழுப்புரம் பேருந்து நிலையத்தில் உள்ளது.
இதற்கு காரணம் விழுப்புரத்தில் ஏரியை ஆக்கிரமித்து பேருந்து நிலையத்தை கட்டியதுதான் இதற்க்கு காரணம் என்று கூறிய டாக்டர் ராமதாஸ், இதே போன்று திண்டிவனத்தில் தற்போது புதியதாக கட்டப்பட்டு வருகின்ற பேருந்து நிலையமும் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வருவதனால் அந்த பேருந்து நிலையத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்று ராமதாஸ் கூறினார்.