செயற்கை நுண்ணறிவு தொழிலில் இந்திய இளைஞர்களுக்கு 500 முன்னணி நிறுவனங்களில் பயிற்சியளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது
உலக அளவில் சில அமைப்புகளுக்கு நிதிக்கொடை அளித்து நாட்டின் வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கிறார்கள். இது இந்தியாவிடம் எடுடாது,தேசத்தின் பாதுகாப்பு தான் முக்கியம்
புதுச்சேரியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
மோத்வானி ஜடேஜா அறக்கட்டளை சார்பில் பாண்டி லைட் பெஸ்ட்(பில்எப்) இலக்கியத் திருவிழா கடற்கரை சாலையில் உள்ள அரவிந்தோ சொசைட்டி அரங்கில் 3 நாட்கள் நடைபெற்றது. இதனை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார்.
நிறைவு நாளான இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் வரவேற்று பேசிய சொசைட்டி பொறுப்பாளர் ஆனந்த் பேசும்போது, விழா முடிவதற்குள் அனைவரும் வரியை கட்டிவிடுங்கள் என நகைச்சுவையாக குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி தனது உரையை தொடங்கிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், வரித்தொடர்பாக எண்ணிடம் இன்னும் 7 நாட்களுக்கு என்னிடம் பேசாதீர்கள்.
இல்லை என்றால் என்னிடம் மன்னிப்பு கேட்டதாக தோற்றத்தை உருவாக்கவிடுவார்கள்(அண்ணப்பூரணா சம்பவம்). என்றார்.
தொடர்ந்து தனது உரையை நிகழ்த்திய நிர்மலா சீத்தராமன், …..
ஊழல் இல்லாத காரணத்தால்தான் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது பிடிக்காமல் விரக்தியின் காரணமாக சிலர் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் என்றும், தேசப்பாதுகாப்பு தான் முக்கியம், பாதுகாப்புக்கு செலவிடுவதில் மத்திய அரசு சமரசம் செய்து கொள்ளாது. 80 கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். அவர்களை மேம்படுத்தவதற்கு மத்திய அரசு போராடி வருகின்றது. வரி செலுத்துவதில் நடுத்தர மக்களும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். அப்படி கூறக்கூடாது அவர்களை முன் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் ஸ்மார்ட் போன், மின்னணு பொருட்களின் ஏற்றுமதியில் இந்தியா பலமடங்கு முன்னேறி உள்ளது. அதே நேரத்தில் உலக அளவில் சில அமைப்புகள் நாடுகளுக்கு நிதிக்கொடை அளித்து மாநில வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கிறார்கள். இது இந்தியாவிடம் எடுடாது. தேசத்தின் பாதுகாப்பு தான் முக்கியம். அதன் மூலம் தான் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும. சிறு குறு தொழில்களில் வளர்ச்சி தேவை. அதற்கான அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு தேடி வருகின்றது. செயற்கை நுண்ணறிவு தொழிலில் இந்திய இளைஞர்கள் பயிற்சி பெற முடியும். இந்தியாவில் உள்ள 500 முன்னணி நிறுவனங்களில் இளைஞர்கள் பயிற்சி மத்திய அரசு சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் அது செயல்பாட்டுக்கு வரும்.
கடந்த 4, 5 ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது வளர்ச்சியடைந்து வரும் பாரதத்துக்கு எடுபாடாது என்று அவர் தெரிவித்தார். முன்னதாக ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தராமனை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.