in

கோபுர கலசத்தில் தங்கம் மங்கிய விவகாரம் அறநிலைத்துறையினர் ஆய்வு


Watch – YouTube Click

கோபுர கலசத்தில் தங்கம் மங்கிய விவகாரம் அறநிலைத்துறையினர் ஆய்வு

பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் கோயிலில் கோபுர கலசத்தில் தங்கம் முலாம் மங்கிய விவகாரம்: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவினர் ஆய்வு

நாகை மாவட்டம் எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி13 ஆம் தேதி நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது எட்டு கோபுர செப்பு கலசத்தில், பூசப்பட்ட தங்க முலாம் நிறம் மங்கி காணப்பட்டது.

இந்நிலையில் தங்க முலாம் பூசப்பட்டத்தில் ஐயப்பாடு இருப்பதாக எழுந்த புகாருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது‌. இதையடுத்து நாகை இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர்/சரிபார்ப்பு இராணி, இந்து சமய அறநிலைத்துறை மண்டல வைர நுண் அறிஞர் இரா.ஹரிஹரன் ஆகியோர் அடங்கிய குழுவினரால் இன்று கலசத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோயிலில் உள்ள மூலவர், சௌந்தரேஸ்வரர், ஆனந்தவல்லி அம்மன் மற்றும் ராஜகோபுரம் ஆகியவை முறைப்படி யாகசாலை பூஜையோடு மூலவர் ராஜகோபுரம் உள்ளிட்ட எட்டு கோபுர கலசங்கள் கீழிறக்கப்பட்டு ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆய்வின் போது துப்பாக்கி இந்திய போலீசாரோடு 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.


Watch – YouTube Click

What do you think?

நுரையீரல் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு நலத்திட உதவி வழங்கப்பட்டது

ஒரே ஸ்ட்ரெச்சரில் இரு கர்ப்பிணி பெண்களை அழைத்துச் சென்ற பணியாளர்