in

புதுச்சேரி மின்துறை மதில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கிய முதலமைச்சர்


Watch – YouTube Click

புதுச்சேரி மின்துறை மதில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 5 நபர்களுக்கு தலா 10 லட்ச ரூபாயும் காயமடைந்ததற்கு 3 நபர்களுக்கு 3 லட்ச ரூபாயும் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்

புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் வசந்த் நகர் என்ற பகுதியில் பொலிவுறு நகரத்திட்டத்தின் வாய்க்கால் அமைக்க பணி நடைபெற்று. அப்பொழுது 16 தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருந்த போது வாய்காலில் இருந்த சேற்றை வெளியேற்றி சுவர் அமைக்கும் பணி நடந்தது. மின் துறைக்கு சொந்தமான 33 ஆண்டுகள் பழைய சுற்று சுவர் திடீரென இடிந்து விழுந்தது.. இதில் இடிபாடுகளுக்குகிடையே தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.

அவர்களை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அங்கு சிகிச்சை பலனின்றி பாக்யராஜ்,ராஜேஷ்கண்ணன், அந்தோனிசாமி, கமலஹாசன், பாலமுருகன் ஆகிய ஐந்து பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த சீனிவாசன்,பாலமுருகன்,குணசேகரன் ஆகியோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.. நாடாளுமன்றத் தேர்தலின் காரணமாக இவர்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் அறிவிக்கப்படாத இருந்த நிலையில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலகிக் கொள்ளப்பட்டதன் காரணமாக முதலமைச்சர் ரங்கசாமி உயிரிழந்த ஐந்து நபர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும் காயமடைந்த மூன்று நபர்களுக்கு 3 லட்ச ரூபாயும் சட்டசபை வளாகத்தில் உறவினர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்….


Watch – YouTube Click

What do you think?

நான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் மதுரை ஆதினம் பேட்டி

தமிழ்நாடு அரசின் விலையில்லா புத்தகங்களை மாணவிகளுக்கு கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்