பள்ளி வகுப்பறை கட்டிடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மேலேரிப்பாக்கம் ஊராட்சியில் புதிய இரண்டு வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டடம் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திருக்கரங்களால் காணொலி காட்சி மூலம் திறக்கப்பட்டது.
பள்ளியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடி இந்தநிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் கமலக்கண்ணன் அனைவரையும் வரவேற்றார்
மேலேரி பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் புபதி அவர்கள் அனைவரையும் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டம் மூலம் இரண்டு வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டடம் கட்டப்பட்டு ரிப்பன் வெட்டி. குத்துவிளக்கேற்றி திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் மருத்துவர். ஆர்டி அரசு முன்னால் சட்டமன்ற உறுப்பனர் தலைமையில், திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் .தமிழ்மணி துணை சேர்மன் .பச்சையப்பன், ரமேஷ் மாவட்ட கவுன்சிலர் மற்றும் தனசேகரன் தத்தலூர் கவுன்சிலர், மணப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் எம் கே .ரஞ்சித் குமார. மற்றும் .கடும்பாடி ஒன்றிய கவுன்சிலர் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சார்ந்த.
அத்தனை தலைவர்கள் துணைத்தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆசிரியர்கள் பெற்றோர் மாணவர் மேலேரிப்பாக்கம் ஊராட்சி மன்றத் துணைத் .தலைவர் . கஸ்தூரி புண்ணியக்கோட்டி மற்றும் அனைத்து வா ர்டு உறுப்பினர்கள் அருகாமை பள்ளி தலைமையாசிரியர் பொதுமக்கள் மகளிர் திரளாக கலந்து கொண்டு பள்ளி கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
மேலேரிப்பாக்கம் ஊராட்சி மன்றம் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர் நிகழ்வில் கலந்து கொண்டு முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் பள்ளி சார்பாக புத்தகம் நினைவு பரிசு வழங்கப்பட்டது.