புதிய கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார்
நாகப்பட்டினம் அடுத்த ஒரத்தூரில் புதிய கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நாளை தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிலையில் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நாகையில் இருந்து ஒரத்தூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள சாலை பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
சாலை பணிகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் சாலை பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நெடுஞ்சாலைத்துறை உள் தணிக்கை ஆவணங்களை ஆய்வு செய்த அவர், மாவட்டத்தில் முடிவுற்ற நெடுஞ்சாலை பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சாலை அமைக்க பணியில் காலதாமதம் செய்யும் ஒப்பந்தக்காரர்களுக்கு தொடர்ந்து அபராதங்கள் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
கடல் சீற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட இலங்கை காங்கேயன் துறை- நாகப்பட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
இந்த ஆய்வில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என். கௌதமன், மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.